உள்ளூர் செய்திகள்

நம்மால் ஏதும் நடக்கவில்லை

* நான் செய்கிறேன்; நான் சாதனை புரிந்தேன்; என்னாலேயே செய்ய முடிந்தது என்பன போன்றவை எல்லாம் ஆணவத்தின் அடையாளங்கள். நாம் செய்பவை அனைத்தும் இறைவனால் நிகழ்ந்தவை என்று எண்ணும்போது நம்முடைய ஆணவம் மறைகிறது.

* சாதிக்கும் போது நாமே சொந்தமாக சாதித்து விட்டதாக எண்ணிக் குதித்து மகிழ்கிறோம். பெருமையால் தலைகனத்து விடுகிறது. ஆனால், தவறுகள் நேர்ந்து நாம் துன்பப்படும் போது, 'ஆண்டவன் ஏன் தான் இப்படி சோதிக்கிறானோ?' என்று குமுறுகிறோம். 'கடவுளே! உனக்கு கண் இல்லையா?' என்று கதறுகிறோம்.

* இறைவன் நமக்கு சக்தியையும், சிந்திக்கும் ஆற்றலையும் கொடுத்திருக்கிறான். அதைக் கொண்டு நல்ல செயல்களை செய்யும் வாய்ப்புக்களை மட்டுமே நாம் தேடிப்போக வேண்டும்.

* 'உலகத்தின் முதலும் முடிவும் நானே' என்ற சுயநலத்துடன் வாழ்ந்தால் மிருகங்களைப் போல நம் வாழ்க்கையும் மாறி விடும். நம்முடைய அறிவு சிற்றறிவு; நம்மை வழிநடத்த பேரறிவாளனான இறைவன் இருக்கிறான் என்ற மனத்தெளிவோடு நாம் செயல்பட வேண்டும்.
-சின்மயானந்தர்