உள்ளூர் செய்திகள்

மயங்காதிரு மனமே!

இறைவன் கூறுகின்றான்:* (நபியே!) மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: அவ்விரண்டிலும் பெருங்கேடு இருக்கிறது. அவற்றில் மக்களுக்கு சிறிது பயன்கள் இருப்பினும் அவற்றினால் ஏற்படும் பாவம் அவற்றின் பயனை விட அதிகமாக இருக்கின்றது.(திருக்குர்ஆன்(2:219)* மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கு இடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி இறைவனை நினைவு கூர்வதிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவே ஷைத்தான் விரும்புகிறான். இதற்குப் பிறகாவது நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்வீர்களா?திருக்குர்ஆன் (5:91)* நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: எந்தப் பொருளை அதிக அளவில் உட்கொண்டால் போதை உண்டாகுமோ, அதே பொருளை குறைந்த அளவில் உட்கொள்வதும் தடை செய்யப்படுகிறது. நூல்: அஹ்மத், அபூதாவூத்(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)