உள்ளூர் செய்திகள்

அபகரித்து உண்ணாதீர்கள்

* நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதியான முறையில் தின்பதற்காக- அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும் - அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளை அணுகாதீர்கள். (திருக்குர்ஆன்2: 188)* நாம் பதவியில் அமர்த்தி இருக்கும் ஒருவர் நம்மிடமிருந்து ஓர் ஊசியை மறைத்தாலும், அல்லது அதனை விட ஒரு சிறிய பொருளை மறைத்தாலும் அதனை அவர் அபகரித்துக் கொண்டார் என்றே பொருள். மறுமை நாளில் அதனை அவர் சுமந்த வண்ணமே வருவார். (நபிகள் நாயகம்(ஸல்) நூல்: முஸ்லிம்)* பரிசாகக் கிடைத்த பொருளை அரசிடம் ஒப்படைக்காமல் தம்மிடம் வைத்துக் கொண்ட அதிகாரிகளைப் பார்த்து நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். ''இவர்(அரசுப் பணி புரியாமல்) தாம் தாய் வீட்டிலேயே இருந்தால் அப்பொருள்கள் அவருக்குக் கிட்டியிருக்குமா?'' (நூல்: புகாரி, முஸ்லிம்)(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)