பகட்டுக்காகச் செய்யாதீர்!

* கடமையைச் செய்யுங்கள். பலனை எதிர்பாருங்கள்; மனிதர்களிடத்தில் அல்ல; இறைவனிடத்தில்!
* (இறைவனின் அடியார்கள்) இறைவனின் மீதுள்ள அன்பினால் வறியவருக்கும், அநாதைக்கும், கைதிக்கும் உணவளிக்கின்றார்கள். (மேலும் அவர்களிடம் கூறுகின்றார்கள்) ''நாங்கள் இறைவனுக்காகவே உங்களுக்கு உணவளிக்கின்றோம். நாங்கள் உங்களிடமிருந்து எந்த பிரதிபலனையும் நன்றியையும் எதிர்பார்க்கவில்லை''.
* கேடு தான்! தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கிறார்களே, அப்படிப்பட்ட தொழுகையாளிகளுக்கு! அவர்கள் பிறருக்கு காட்டுவதற்காகவே செயல்படுகின்றார்கள்.
* எவர்கள் இறைவழியில் தங்கள் பொருளைச் செலவு செய்த பின்னர் அதைத் தொடர்ந்து தாங்கள் செலவு செய்ததைச் சுட்டிக்காட்டிப் பேசாமலும் (மனம்) புண்படச் செய்யாமலும் இருக்கின்றார்களோ, அவர்களுக்குரிய நற்கூலி அவர்களின் அதிபதியிடம் இருக்கின்றது. மேலும் அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். கனிவான சொல்லும், மன்னித்து விடுவதும் மனம் புண்படச் செய்யும் தானத்தைவிடச் சிறப்பு உடையனவாகும்.
- (வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)