உள்ளூர் செய்திகள்

சொர்க்கத்தில் பதவி கிடைக்க...

* சொர்க்கமும் நரகமும் உங்கள் பெற்றோராகும். அவர்களுக்கு நல்லதைச் செய்தால் சொர்க்கத்தின் வாசலை அல்லாஹ் திறந்து விடுகிறான். நோவினைச் செய்தால் நரகம் தான் கிடைக்கும்.* மனிதர்களே! நீங்கள் இறைவனிடம் சொர்க்கப்பதியை வேண்டும் போதெல்லாம் 'பிர்தவ்ஸ்' என்னும் சொர்க்கத்தைக் கேளுங்கள். ஏனென்றால் சொர்க்கங்களுக்கு எல்லாம் உயர்வானது 'ஜன்னத்துல் பிர்தவ்ஸ்' என்னும் சொர்க்கமாகும்.* உங்கள் குழந்தைகளை அதிகமாக முத்தமிடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவியுண்டு.* எவர் நரகத்தை விட்டும் பாதுகாக்கப்பட்டு, சொர்க்கத்தில் நுழைய வேண்டும் என்று ஆசைப் படுகிறாரோ, அவர் அல்லாஹ்வைக் கொண்டும், மறுமை நாளைக் கொண்டும் விசுவாசம் கொண்ட நிலையில் மரணிக்கட்டும். தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பட்டும்.- நபிகள் நாயகம்