நீங்களும் உதவுங்கள்
* எதிரிகளிடம் இருந்து முஸ்லிம்களை காப்பாற்ற நபிகள் நாயகம் பல கூட்டத்தாருடன் உடன்படிக்கை செய்து கொண்டார். முதலாவதாக நுாறு பேர் கொண்ட குழுவை மெக்காவிற்கு அனுப்பினார். 'நம் எதிரிகளான குரைஷிகளின் உயிருக்கோ, பொருளுக்கோ சேதம் விளைவிக்காமல் தொந்தரவு செய்வது மட்டுமே உங்களின் பணி' என அவர்களுக்கு கட்டளையிட்டார். * 'ஜூஹைனா' என்ற கூட்டத்தாரிடம் சென்றார். அவர்களிடம் 'முஸ்லிம் - குரைஷிகள்' ஆகிய இருவருக்குமே உதவி செய்ய மாட்டோம்' என உறுதிமொழியை வாங்கினார். * பனுா லம்ராக் கோத்திரத்தாரிடம், 'பனுா லம்ராக் கோத்திரத்தாருக்கு முஹம்மதுர் ரஸூசிலுல்லாஹ், எழுதிக் கொடுத்த உடன்படிக்கை இது. உம் மக்களுடைய உயிரும். பொருளும் பாதுகாக்கப்படும். உதவிக்காக எப்போது கூப்பிடுகிறோமோ, அப்போது நீங்களும் உதவ வேண்டும்' என்ற உறுதிமொழியைப் பெற்றார். * பனுா முத்லஜ் என்னும் கோத்திரத்தாரிடம் சமாதான உடன்படிக்கை மேற்கொண்டார்.