அனைவரிடமும் அன்பு காட்டுவோம்
*அன்பு என்பது உங்கள் உறவினர்கள் மீது மட்டும் செலுத்தப்படுவதல்ல. அன்பு அனைவர் மீதும் செலுத்தப் படுவதாகும்.* உங்களுக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பாத வரையில் நீங்கள் உண்மையுள்ள இறை நம்பிக்கையாளர் ஆக முடியாது.* இறைவன் ஒருவனே! அவனே அகிலத்தையும், அகிலத்தாரையும் படைத்தான். எனவே, அனைத்து நாடுகளும், அனைத்து மனிதர்களும் சமமே. இறைவனின் வழிகாட்டுதலும் அனைவருக்கும் பொதுவானதே!* உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே! இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னைத் துன்பத்தில் ஆழ்த்திவிடுவான்.* இறைவன் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவதில்லை... சிரமத்திற்குப் பின்னர் இலகுவை இறைவன் உண்டாக்குவான். உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.* வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்கள் புண்ணியவான்கள் ஆவர்.வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து