இனிய பதில் கூறுங்கள்
* ஒருவர் தர்மம் செய்கிறாரென்றால், அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நல்லெண்ணத்தின் காரணமே.* ஒருவர் கஞ்சத்தனம் செய்கிறார் என்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட தவறான எண்ணத்தின் காரணமேயாகும்.* வாழ்நாளெல்லாம் கஞ்சனாக இருந்து விட்டு மரணவேளையில் கொடை வள்ளலாக மாறும் மனிதனைப் பார்த்து இறைவன் கோபம் அடைகின்றான்.* நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர். ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொள்ளாதீர்.* எவரிடமும் உங்கள் தேவைகளை மறைமுகமாகச் சொல்லிக்கேளுங்கள். ஏனென்றால் ஒவ்வொன்றிற்கும் பொறாமைப்படுபவன் இருந்து கொண்டே இருக்கிறான்.* வசதி இல்லாதவன் உங்களிடம் ஏதேனும் கேட்டால் கொஞ்சமேனும் கொடுத்து அனுப்புங்கள் அல்லது இனிய வார்த்தைகளால் பதில் சொல்லுங்கள்.* கஞ்சத்தனத்தைப் பற்றி பயந்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் முன்னோர்கள் கஞ்சத்தனத்தின் காரணமாகத் தான் அழிந்து போனார்கள்.- நபிகள் நாயகம்