உண்மை வெற்றி தரும்
UPDATED : நவ 19, 2012 | ADDED : நவ 19, 2012
* பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக ஆகிவிடுகின்றன. * பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள் அற்பக் காரியங்களாகி விடுகின்றன.* எவனுடைய தீங்கான செயலுக்கு பயந்து மக்கள் அவனுக்கு மரியாதை கொடுக்கின்றார்களோ அவர்களே மக்களில் மகாகெட்டவர்கள்.* அக்கிரமம் செய்கின்றவன் நிச்சயமாக அவனையே அக்கிரமத்தில் மூழ்கடிக்கின்றான். ஆனால், அவனால் இதனை உணர்ந்து கொள்ள முடிவதில்லை.* வாங்கும்போதும், விற்கும்போதும் சாந்த குணத்தை கடைபிடிப்பவர் மீது இறைவனின் கருணை உண்டாகட்டும்.* முதலாளிக்கும் தொழிலாளிக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் சிண்டு முடித்து சண்டை மூட்டுபவன் என்னைச் சார்ந்தவன் அல்ல.* நீங்கள் உண்மை பேசுங்கள். அது அழிவைத் தந்தாலும் முடிவில் வெற்றியைத் தரும்.- நபிகள் நாயகம்