சுறுசுறுப்பாக இருங்கள்!
UPDATED : டிச 19, 2012 | ADDED : டிச 19, 2012
* நம்பிக்கையும், மனஉறுதியும் நம் வாழ்விற்கு அடிப்படை. இவை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாமே இருந்த மாதிரி தான்.* இறைவனை நேசிப்பவனுக்கு துன்பம் கிடையாது. எப்போதும் இறை சிந்தனையில் இருப்பவன் புண்ணியவான்.* தவறுவது மனித இயல்பு தான். அதைப் பெரிதாக எண்ண வேண்டாம். அதனை மீண்டும் மீண்டும் நினைப்பதால் தான் துன்பம் உண்டாகிறது. * உங்களுக்கு மன அமைதி வேண்டுமானால் பிறர் குற்றங்களைக் காணாதீர்கள். மாறாக உங்களது குற்றங்குறைகளை எண்ணிப் பாருங்கள்.* யாராவது ஒரு உயிர்க்கு மகிழ்ச்சியை உன்னால் கொடுக்க முடியுமானால் உன் வாழ்வின் லட்சியம் நிறைவேறி விட்டதாக அர்த்தம்.* சோம்பலாக இருப்பதால் உடல் மட்டுமில்லாமல் மனமும் கெட்டுப் போய் விடும். அதனால் எப்போதும் சுறுசுறுப்பாய் பணியில் ஈடுபடுங்கள்.- சாரதாதேவியார்(இன்று சாரதாதேவியார் பிறந்த தினம்)