உள்ளூர் செய்திகள்

கடவுளிடம் கொடுத்து விடு

* கடவுளிடம் கேட்பதாக இருந்தால், தூய உள்ளத்தையும், பக்தியுணர்வையும் கேட்பாயாக. * எங்கிருந்தாலும் மகிழ்ச்சியுடன் இருக்கும் விதத்தில் மனதை பண்படுத்திக் கொள். * மனதிற்குச் சரி எனத் தோன்றுவதைச் செய்து விடு. ஆனால் எதைச் செய்தாலும் கடவுள் நினைவோடு செய்.* உன் மனம் இறைவனிடம் இருக்குமானால், நீ கேட்டதெல்லாம் கிடைக்கும். * புத்தம் புது மலர் போல கடவுளின் திருவடியில் தினமும் மனதைச் சமர்ப்பித்து விடு. - சாரதாதேவியார்