நல்லதை நாடுங்கள்
UPDATED : ஏப் 01, 2014 | ADDED : ஏப் 01, 2014
* கடவுளின் நாமத்தை இடைவிடாது ஜெபிப்பவனுக்கு வாழ்வில் துன்பம் உண்டாகாது.* உலக இன்பத்தை நாடினால் எந்தக் காலத்திலும் திருப்தி உண்டாவதில்லை.* வாழ்வில் தலையாய விஷயம் சாந்தமாக இருப்பதுவே. அமைதிக்கு புறம்பான விஷயத்தை ஒருபோதும் நாட வேண்டாம்.* நன்மையைச் செய்வதில் விருப்பமும், தீமையைச் செய்வதில் வெறுப்பும் உள்ளவராக இருங்கள்.* தூய உள்ளம் படைத்தவன் கண்ணுக்கு உலகெங்கிலும் உள்ள நன்மை மட்டுமே தெரியும்.- சாரதாதேவியார்