கடவுள் எதை விரும்புகிறார்?
* இறைவனை நமக்கு சொந்தமாக்கிக் கொண்டால், ஆன்மிகத் துறையில் நாம் விரும்பும் அனைத்தையும் பெற்று இன்பமாக வாழலாம்.* முதுமையில் துன்பம் வந்த பிறகு இறைவனை தேடுவதைவிட, இளமையில் பக்தி செலுத்துவதே புத்திசாலித்தனம்.* எவ்வளவு வேலை இருந்தாலும், பிரார்த்தனைக்கும், ஆன்மிக பயிற்சிகளுக்கும் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும்.* உண்மை அன்பை கடவுள் விரும்புகிறார். வெறும் வார்த்தைகள் இறைவனைத் தொடாது. இயலாதவர்களுக்கு சேவை செய்வதும் அன்பில் ஒரு வகையே.* மனம் ஒருமுகப்படுவதற்காக இறைவனுக்கு பூஜை செய். தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஜெபம் செய்ய உன்னால் முடிந்தால், அது உனக்கு நன்மை தரும்.* பகலும், இரவும் சேரும் மாலை நேரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் உகந்தது. அந்தப் புனிதமான நேரத்தில் மனம் தூய்மையாக இருப்பதால் இறைவழிபாட்டில் சுலபமாக ஈடுபடும்.* தூய்மையான மனம் கொண்டவர்கள் வாழ்க்கையில் அனைத்தையும் தூய்மையாகவே காண்கின்றனர்.- சாரதாதேவியார்