உலகமே உங்கள் குடும்பம்
UPDATED : ஜன 20, 2017 | ADDED : ஜன 20, 2017
* உலகத்தை உங்களின் குடும்பமாக கருதுங்கள். உள்ளதை அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.* எல்லா உயிர்களின் மீதும் இரக்கம் கொள்ளுங்கள். சம்பாதித்த பணத்தில் பத்தில் ஒரு பங்கு தர்மம் செய்யுங்கள்.* தேவை இருந்தால் மட்டும் பேசுங்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.* பொறுப்பில் இருந்து தப்பிக்க முயலாதீர்கள். முயற்சியில் வெற்றியோ, தோல்வியோ எதிர்கொள்ளத் தயங்காதீர்கள்.- சிவானந்தர்