உள்ளூர் செய்திகள்

எண்ணத்தில் உறுதி

* மனம் தான் வாழ்வின் விளைநிலம். அதன் தன்மையைப் பொறுத்தே ஒருவரின் வாழ்வு அமைகிறது.* எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் இருந்து விட்டால் நாம் எண்ணியது எல்லாம் அப்படியே நடந்து விடும்.* ஆசையை நம்மால் அடியோடு ஒழிக்க இயலாது. ஆனால் அதை ஒழுங்குபடுத்தி சீரமைக்க முடியும்.* தேவைகளைப் பெருக்குவது நல்லதல்ல. இதனால் சமநிலை இழந்து மனம் பாவத்தில் ஈடுபடுகிறது.* எந்த சூழ்நிலையிலும் உங்களை கோபம் அணுகாதபடி பார்த்துக் கொள்வதே நன்மை பயக்கும்.- வேதாத்ரி மகரிஷி