உள்ளூர் செய்திகள்

உலகமே வசப்படும்

* அறிவுநிலையில் உயர்ந்தவர்கள், எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்பார்கள். * எந்த நிலையிலும் ஒருவனுக்கு கோபம் எழவிட்டால், அவன் ஞானநிலையை பெற்று விட்டான் என பொருள்.* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கி விடும்.* தவறான எண்ணங்களை தவிர்க்க விரும்பினால், நல்ல எண்ணங்களை மட்டும் மனதில் அனுமதியுங்கள். மனதை உயர்த்திக் கொண்டு விட்டால், எல்லையில்லா இன்பம் உண்டாகும்.* உண்மையில் எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், அது மனதில் எழும் ஒழுங்கற்ற எண்ணம் தான்.* வாங்கும் கடனும், தேங்கும் பணமும் வளர வளர வாழ்வைக் கெடுத்து விடும். * இன்மொழி பேசுபவனுக்கு இந்த உலகமே வசப்படும். வாழ்வு வெற்றிகரமானதாகி விடும். - வேதாத்ரி மகரிஷி