நல்லதற்கே மனதில் இடம்
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கிவிடும். தாழ்த்திக் கொள்வதும் உயர்த்திக் கொள்வதும் மனிதனிடமே இருக்கிறது.* எல்லாருக்கும் நன்மை தரும் நல்ல விஷயங்களுக்கு மனதில் இடம் அளியுங்கள். எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் இருந்தால் விரும்பியதை அடைய முடியும். * தேவையான இடத்தில் நீங்கள் கோபம் கொள்வது போல நடிக்கலாம். அதுவும் ஒருவரைத் திருத்தும் நோக்கில் மட்டுமே வெளிப்பட வேண்டும். * எந்தச் சூழ்நிலையிலும் கோபம் வரவில்லை என்றால் ஞானம் வந்து விட்டது என்று பொருள்.* இறைவனை முழுமையாகச் சரணடைந்து விட்டால் மனதில் ஆணவம் உண்டாகாது.* ஒரு செடியைப் பார்த்துக் கூட 'வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தலாம். அதனால், அச்செடியின் பலவீனம் நீங்கி நன்கு வளரத் தொடங்கிவிடும்.* வீட்டில் அன்பு, அருள் நிறைந்த நல்லவர்களின் உருவப்படங்களை மாட்டி வையுங்கள். இதன்மூலம் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகும். - வேதாத்ரி மகரிஷி