உள்ளூர் செய்திகள்

எப்போதும் உதவி செய்

வறுமையில் வாடிய விறகு வெட்டி மற்றவருக்கு உதவி செய்ய அஞ்சுவதில்லை. இதனால் அவருக்கும், மனைவிக்கும் அடிக்கடி சண்டை வரும். ஒருநாள் நபிகள் நாயகத்திடம் தன் நிலையை சொல்லி வருந்தினார் விறகுவெட்டி. அதற்கு அவர், ''இப்போது செய்வதை கைவிட்டு விடாதே. இருப்பதில் திருப்தி கொள். உழைப்பதற்கு தயங்காதே. அதன் மூலம் கிடைக்கும் பணம் நிலைக்கும்'' என அறிவுரை கூறினார். ஒருமுறை வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ஆற்றில் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. அதில் தங்க ஆபரணங்கள் இருப்பதைக் கண்டார். ஒரே நாளில் தான் கோடீஸ்வரனாகி விட்டதை எண்ணி மகிழ்ந்தார். ஆனால் நாயகத்தின் அறிவுரை நினைவுக்கு வர, தர்ம வழியில் அதன் மூலம் கிடைத்த பணத்தை செலவிட்டார்.