லாபம்
UPDATED : பிப் 05, 2025 | ADDED : பிப் 05, 2025
தோழரான ஹுபைப் அரசியல் தலைவராகவும் அதே நேரம் மறுமையை நேசிப்பவராகவும் இருந்தார். ஒருநாள் குடும்பத்துடன் வெளியே சென்ற போது வீட்டிற்கு தேவையான பொருட்கள், ஆடைகளை வாங்கித் தருமாறு அவரது மனைவி கேட்டாள். அதற்கு அவர், ''என்னிடம் உள்ள பணத்தை முழுமையாக செலவழிக்க வேண்டாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள் மீதிப்பணம் என்னிடமே இருக்கட்டும்'' என்றார். அதன்படி பொருள் வாங்க ஒரு குறிப்பிட்ட தொகையை மனைவியிடம் கொடுத்தார். அவர் கடைக்கு சென்றதும் மீதி பணத்தை தர்மவழியில் செலவழித்தார்.இது குறித்து மனைவி கேட்ட போது, ''நான் செய்த செயல் உண்மையான லாபத்தை கொடுக்கும். மறுமையில் நன்மையளிக்கும்'' என பெருமிதமாகச் சொன்னார்.