போக மாட்டேன்
UPDATED : நவ 27, 2025 | ADDED : நவ 27, 2025
முன்பு மனிதர்களை விலைக்கு வாங்கி அடிமையாக வைக்கும் வழக்கம் இருந்தது. ஒருநாள் நபிகள் நாயகத்தின் மனைவி கதீஜா கடைத்தெருவிற்கு சென்றார். அங்கு சிறுவன் ஒருவன் (அடிமையாக) விற்பனைக்கு இருப்பதை கண்டார். அதைப் பார்த்தவுடன் கண்ணீர் பெருகியது. அவனை விலைக்கு வாங்கி தன் வீட்டுக்கு அழைத்து வந்தார். ஒரு மாதம் சென்ற பின் சிறுவனின் தந்தை அவனை விலைக்கு வாங்க நாயகத்தின் வீட்டுக்கு வந்தார். ''சிறுவன் விரும்பும் இடத்தில் வாழ உரிமை உண்டு'' என்றார் நாயகம். கதீஜாவை பிரிய சிறுவனுக்கு மனமில்லை. ''இந்த வீட்டை விட்டு நான் போக மாட்டேன்'' என காலில் விழுந்து கதறினான். இதைப் பார்த்த சிறுவனின் தந்தை அங்கிருந்து கிளம்பினார். இந்தச் சிறுவனே நபித் தோழரான ஸைத்(ரலி).