நலமுடன் வாழ...
UPDATED : மே 13, 2022 | ADDED : மே 13, 2022
நாயகம் ஒருநாள் தோழர்களிடம், ''நீங்கள் யாரை மாவீரன் என்று சொல்வீர்கள்'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ''பலசாலியாக இருப்பவரே மாவீரன்'' என்றனர். ''நீங்கள் தவறாக கூறுகிறீர்கள். உண்மையான வீரம் என்பது அதுவல்ல. கோபத்திலும் தன்னை கட்டுப்படுத்தி யார் அமைதியாக இருக்கிறாரோ அவர்தான் மாவீரன்'' என்றார். பார்த்தீர்களா.. கோபம்தான் ஒருவரை பலவித பிரச்னைகளுக்குள் தள்ளிவிடுகிறது. சிலர் 'கோபம் வந்தால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது' என சொல்வதை கேட்டிருப்போம். இதனால் அவர்களது நல்ல குணம்தான் கெடுகிறது. அதுமட்டுமல்ல.. அடிக்கடி கோபப்படுவோரின் ஆயுளும் கெடும். எனவே கோபத்தை குறைத்து நலமுடன் வாழுங்கள்.