உள்ளூர் செய்திகள்

வல்லவனுக்கு வல்லவன்

தன் வீட்டருகில் உள்ள நிலத்தில் பயிரிட விரும்பினார் முல்லா. அதன் உரிமையாளரிடம் விளைச்சலில் பாதியை தருகிறேன் எனச் சொன்னார். ஆனால் அவரோ, பூமியின் மேற்பகுதியில் விளைவது எனக்கே சொந்தம் என ஒப்பந்தம் எழுதினார். மறுப்பு சொல்லாத முல்லா, பூமியின் கீழே விளையும் கிழங்கு வகைகளை பயிரிட்டு அமோகமாக பயன் பெற்றார். வெட்கம் அடைந்த உரிமையாளர், நிலத்தில் கீழ் பகுதியில் விளையும் பொருட்கள் எனக்குரியவை என மீண்டும் ஒப்பந்தம் செய்தார். முல்லாவோ பூமியின் மேலே விளையும் கோதுமையை பயிரிட்டு பயன் பெற்றார். ஏமாற்றம் அடைந்த உரிமையாளர் மன்னிப்பு கேட்டார். முல்லாவும் அவருக்கான பங்கை கொடுத்தார். இதையே வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பார்கள்.