உள்ளூர் செய்திகள்

உண்மையின் மதிப்பு

முல்லா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒருவர், ''முல்லா அவர்களே... உண்மை பேசுவோரை உலகம் கொண்டாடுவதற்கு என்ன காரணம்'' எனக் கேட்டார்.''உலகில் இரும்பை விட தங்கத்துக்கு மதிப்பு அதிகம் ஏன்'' என முல்லா கேட்டார். ''இது என்ன கேள்வி... இரும்பு தாராளமாக கிடைப்பதால் அதன் மதிப்பு குறைவாக உள்ளது. தங்கம் குறைவாக கிடைப்பதால் அதன் மதிப்பு அதிகம்'' என்றார். ''நீங்களே பதிலை சரியாக சொல்லிவிட்டீர்கள். இந்த காலத்தில் உண்மை பேசுவோரை கண்டுபிடிப்பதே அரிது. அதனால் அவருக்கு அதிகமாக மதிப்பு இருக்கிறது'' என்றார்.பார்த்தீர்களா... உண்மைக்கு எவ்வளவு சக்தி என்பதை புரிந்து கொண்டீர்களா. உண்மை பேசுவது கஷ்டம் என எல்லோரும் நினைக்கின்றனர். ஆனால் பொய் பேசுவதுதான் உண்மையில் கஷ்டமான காரியம். என்னடா இது... புரியாத புதிராக உள்ளதா. எங்கும் உண்மையாக இருந்து பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியவரும்.