உள்ளூர் செய்திகள்

பிறருக்காக பிரார்த்தனை செய்வோம்

தோழர் ஒருவர் நாயகத்திடம் கடன் பிரச்னையால் அவதிப்படுகிறேன். அதிலிருந்து மீள வழி கூறுங்கள் என்றார்.உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். அத்துடன் இப்போது நான் கூறுவதை காலை, மாலையில் சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள் எனக் கட்டளையிட்டார். 'இறைவனே... கடன், கவலையில் இருந்து உனது பாதுகாவலை கோருகிறேன். ஆதரவற்ற நிலை, கஞ்சத்தனம், கோழைத்தனம், என் மீது பிறர் வீணாக செலுத்தும் ஆதிக்கத்தில் இருந்து விடுபட விரும்புகிறேன்' என்றார். அதை தோழரும் பின்பற்றினார். சில நாள் கழித்து நாயகத்திடம், ''நான்பட்ட கடன்கள் அடைக்கப்பட்டு விட்டன. கவலை யாவும் என்னை விட்டு ஒழிந்தன'' என்று கூறி நன்றி பாராட்டினார். நாயகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி நாமும் எதிர்கால நன்மைக்காக பிரார்த்தனையில் ஈடுபடுவோம்.