உள்ளூர் செய்திகள்

அக்கம் பக்கம்

ஆட்டம் ஆரம்பம்!'தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன கூத்துகள் அரங்கேற போகிறது என பொறுத்திருந்து பாருங்கள்...' என, மஹாராஷ்டிராவில் எதிர்க்கட்சி கூட்டணியை பார்த்து கிண்டல் அடிக்கின்றனர், ஆளுங்கட்சி கூட்டணியினர். இங்கு, முதல்வர்ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்கிரஸ்கூட்டணி ஆட்சி நடக்கிறது.எதிர் தரப்பில் சிவசேனா உத்தவ் பிரிவு, தேசியவாத காங்., சரத் பவார் பிரிவு, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. தங்கள் தலைமையிலான கட்சியை உடைத்து, பா.ஜ., ஆட்சி அமைத்ததால்,விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் எப்படியாவது அந்த கட்சியை வீழ்த்தி, பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உள்ளனர், உத்தவ் தாக்கரேயும், சரத் பவாரும். இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்து மிகவும் உஷாராகவே காய் நகர்த்தி வருகிறார், துணை முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ். ஆனால், எதிர்தரப்பில் உள்ள மூன்று கட்சிகளுக்குமே முதல்வர் பதவி மீது ஆசை உள்ளது. 'கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் பதவியை எங்களுக்கு தந்து விட வேண்டும்...' என, மூன்று கட்சிகளின் தலைவர்களும் இப்போதே கொடி பிடிக்கத் துவங்கியுள்ளனர். இதையறிந்த பா.ஜ., மேலிடம், தங்கள் கூட்டணியில்உள்ள கட்சிகளிடம் தாராள மனப்பான்மையுடன் செயல்பட முடிவு செய்துள்ளது. 'தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தொகுதி ஒதுக்கீடு பேச்சின் போதே, எதிர்க்கட்சி கூட்டணி கலகலத்து விடும். அப்புறம் தான் எங்கள் ஆட்டம் ஆரம்பமாகும்...'என்கின்றனர், ஆளுங்கட்சியினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை