உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / வெறுங்கையில் முழம் போடுவதா?

வெறுங்கையில் முழம் போடுவதா?

'நாம் ஒரு தலைவருக்கு ஜால்ரா அடித்தால், நம் அரசியல் எதிரிகள் மற்றொரு தலைவருக்கு ஜால்ரா அடித்து காரியம் சாதித்து விடுகின்றனர்...' என விரக்தியுடன் கூறுகிறார், அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகோய்.இவர், அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகன். காங்., முன்னாள் தலைவர் ராகுலின் தீவிர ஆதரவாளர். தற்போது, கலியாபோர் என்ற தொகுதியின் எம்.பி.,யாக உள்ளார்.இந்த தொகுதி, தருண் கோகோய் குடும்பத்தின் செல்வாக்கு பெற்றது. தருண் கோகோய், அவரது சகோதரர் திலீப் கோகோய், தற்போது கவுரவ் என, தொடர்ந்து அவர்களது குடும்பத்தினர் தான், இந்த தொகுதியின் எம்.பி.,க்களாக இருந்து வந்தனர். தொகுதி மறுவரையில், தற்போது கலியாபோர் இல்லாமல் போய் விட்டது. காசிரங்கா என்ற புதிய தொகுதி உருவாக்கப்பட்டு, அதில் கலியாபோரின் சில பகுதிகள் மட்டும் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாகாவுன் தொகுதியில் தற்போது போட்டியிட காய் நகர்த்தி வந்தார், கவுரவ். இதற்கு ராகுலும் ஆதரவு தெரிவித்தார்.ஆனால் கடைசி நேரத்தில், சோனியா உத்தரவுப்படி, நாகாவுனின் தற்போதைய சிட்டிங் எம்.பி.,யான பிரத்யுத் என்பவருக்கே, இந்த தொகுதியை ஒதுக்கி விட்டது, காங்., மேலிடம்.கவுரவுக்கு, காங்கிரசுக்கு செல்வாக்கு இல்லாத ஜோர்காட் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் வெறுத்து போன கவுரவ், 'வெறுங்கையில் முழம் போடுவதை விட, போட்டியில் இருந்து ஒதுங்குவதே நல்லது...' என, தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி