உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / நடுத்தெருவில் நிற்கணுமா?

நடுத்தெருவில் நிற்கணுமா?

'பாவம்; இவர்கள் இருவரையும் பார்த்தால்பரிதாபமாகத் தான் இருக்கிறது...' என, மஹாராஷ்டிராமாநில துணை முதல்வர்களான ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பற்றி கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை உடைத்து, பா.ஜ., கூட்டணியில் ஐக்கியமானவர் ஏக்நாத் ஷிண்டே. இதேபோல, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசை உடைத்து, பா.ஜ., அணியில் சேர்ந்தவர் அஜித் பவார்.சமீபத்தில் நடந்த மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார். ஷிண்டே, அஜித் பவார் ஆகியோருக்கு துணை முதல்வர் பதவியே கிடைத்தது. ஷிண்டே ஆதரவாளர்கள் 11 பேருக்கும், அஜித் பவார் ஆதரவாளர்கள் ஒன்பது பேருக்கும் அமைச்சர் பதவி கிடைத்தன.ஆனால், இந்த இரு கட்சிகளிலும் உள்ள ஏராளமானோர், தங்களுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என, இருவரையும் நச்சரித்து வருகின்றனர்.'உங்களுக்கு மட்டும் துணை முதல்வர் பதவி கிடைத்தால் போதுமா; உங்களை நம்பி வந்தநாங்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டுமா. அமைச்சர் பதவி தராவிட்டால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விடுவோம்...' என, ஷிண்டே, அஜித் பவார் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுக்கத் துவங்கியுள்ளனர். 'ஆதரவாளர்கள் வெளியேறி விட்டால், நாம் நடுத்தெருவில் நிற்க வேண்டுமே...' என்ற கலக்கத்தில் உள்ளனர், அஜித் பவாரும், ஏக்நாத் ஷிண்டேயும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை