உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / அதிர்ஷ்டம் கைவிடவில்லை!

அதிர்ஷ்டம் கைவிடவில்லை!

'அப்பாடா; இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது...' என பெருமூச்சு விடுகிறார், ராஜ்யசபா எம்.பி.,யும், பா.ஜ., மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி. இவர், ஏற்கனவே, பீஹார் மாநில துணை முதல்வராக பதவி வகித்தவர். கடந்த முறை மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது, தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறை கிடைக்கும் என, எதிர்பார்த்தார். ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த துறை மட்டுமல்ல; அமைச்சரவை பட்டியலிலேயே இவரது பெயர் இடம் பெறவில்லை. இதனால் கடும் ஏமாற்றத்திலும், அதிருப்தியிலும் இருந்தார், சுஷில் குமார் மோடி. 'பா.ஜ.,வில், 70 வயதை கடந்தவர்களுக்கு அரசிலும், கட்சியிலும் முக்கியமான பதவி எதுவும் வழங்கப்படாது' என்ற எழுதப்படாத விதி உள்ளது. இந்த விதியின் காரணமாக, பா.ஜ.,வின் பல மூத்த தலைவர்கள், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளனர். சுஷில் குமார் மோடிக்கு, 72 வயதாகி விட்டதால் தான், அவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை என்றும், வரும் லோக்சபா தேர்தலுக்கு பின், அவருக்கு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு அளிக்கப்படும் என்றும் பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில் தான், 70 வயதை கடந்தவர்களுக்கு முக்கிய பதவி இல்லை என்ற கொள்கையை பா.ஜ., மேலிடம் தளர்த்த திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதைக் கேள்விப்பட்ட சுஷில் குமார் மோடி, 'அதிர்ஷ்ட தேவதை இன்னும் என்னை கைவிடவில்லை. அரசியலில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம்...' என, நம்பிக்கையுடன் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை