உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / யாரும் யோக்கியர் இல்லை!

யாரும் யோக்கியர் இல்லை!

'எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்...' என, விரக்தியுடன் பேசுகின்றனர், ஆந்திர மாநில மக்கள். இங்கு, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. பெரும் சட்டப்போராட்டத்துக்கு பின், அமராவதியில் ஆந்திராவுக்கு புதிய தலைநகரை நிர்மாணிப்பதற்கான பணியை சந்திரபாபு நாயுடு மீண்டும்முடுக்கி விட்டுள்ளார். இதற்கு முன், ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி, அமராவதியில் தலைநகர் அமைப்பதற்குமுட்டுக்கட்டை போட்டார்.இப்போது, அந்த முட்டுக்கட்டைகள் நீங்கி பணிகள் துவங்கி உள்ளன.அடுத்தபடியாக, அமராவதியில் தனக்கு சொந்தமாகபல கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட பங்களாவை கட்டும் பணியையும் சந்திரபாபு நாயுடு துவக்கிஉள்ளார். வாஸ்து நிபுணர்களின் யோசனைப்படி, பளிங்கு கற்களால் ஆன இந்த பங்களாவை, தன் சொந்த செலவில் கட்ட சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.ஆயினும், இதைக் கேள்விப்பட்ட ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியினர் கொந்தளிக்கின்றனர்.'எங்கள் தலைவர் ஜெகன்மோகன் முதல்வராக இருந்தபோது, அரசு விருந்தினர்கள் தங்குவதற்காகவிசாகப்பட்டினம் கடற்கரை அருகே பங்களா கட்டினார். அதை கடுமையாக விமர்சித்த சந்திரபாபுநாயுடு, இப்போது தனக்கு பங்களா கட்டுவது ஏன்...?' என, கேள்வி எழுப்புகின்றனர்.ஆந்திர மக்களோ, 'அரசியல்வாதிகள் யாரும்யோக்கியர் இல்லை...' என, கிண்டல் அடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை