உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / ‘யார் தான் படிப்பது?’

‘யார் தான் படிப்பது?’

‘அரசியல் கட்சி தலைவர்கள் புத்தகம் எழுதுவது, இப்போது ஒரு புதிய போக்காக மாறி விட்டது...’ என கிண்டலாக பேசுகின்றனர், கேரள மாநில மக்கள். கேரளாவில், முதல்வர் சதீசன் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், முதல்வர் சதீசன் எழுதிய, ‘ஆதாம் நீ எவ்விட ஆகுன்னு’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதற்கு தமிழில், ‘ஆதாம் நீ எங்கிருக்கிறாய்’ என்று அர்த்தம். கேரளாவில் உள்ள சர்ச்சுகளில் சதீசன் ஆற்றிய உரைகளின் தொகுப்பு தான், இந்த நுால். ஹிந்து மதத்தைச் சேர்ந்த சதீசன், கிறிஸ்துவ மதத்தை பற்றி எழுதிய நுால் என்பதாலும், கேரளாவில் கிறிஸ்துவ மதத்தினர் கணிசமாக வசிப்பதாலும், கேரளாவில் அதிகம் விற்பனையானது. இதனால் சந்தோஷத்தில் இருக்கும் சதீசன், ‘நான் ஒரு எழுத்தாளன். இந்த புத்தகத்துக்கு கிடைத்த வரவேற்பு என்னை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. என் அரசியல் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை தொகுத்து, இன்னும் சில புத்தகங்களை எழுதுவேன்...’ என, தெரிவித்துள்ளார். சதீசன் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால், கேரள உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா ஆகியோரும், தங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை தொகுத்து, புத்தகம் எழுத முடிவு செய்துள்ளனர். இதைக் கேள்விப்பட்ட கேரள மக்கள், ‘இப்படி ஆளாளுக்கு புத்தகம் எழுதினால், யார் தான் படிப்பது...?’ என, கிண்டலாக கேட்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ