உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

தண்ணீருக்குள் அதிசயம்

அட்லாண்டிக் கடலில் சிறிய நீர்மூழ்கி கலனில் மூன்று மாதமாக தங்கியிருந்தவர் அமெரிக்காவின் ஓய்வு பெற்ற கடற்கரை அதிகாரி ஜோசப் டிடூரி . 93 நாட்களுக்குப்பின் நீருக்குள் இருந்து வெளியே வந்த இவருக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. இதில் 10 வயது குறைந்தவராக மாறியிருக்கிறார் என தெரிவிக்கப் பட்டுள்ளது. நீருக்கடியில் தங்கியிருப்பது மனித உடலில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இவரது பயணம் வெளிப்படுத்தியுள்ளது. சிறந்த துாக்கம், கொலஸ்ட்ரால் அளவு குறைவு, வளர்சிதை மாற்றத்தில் முன்னேற்றம் உட்பட பல நன்மை கிடைத்துள்ளது.

தகவல் சுரங்கம்

பல்லுயிர் பாதுகாப்பு தினம்ஒவ்வொரு உயிரினத்துக்கும் தனி வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. ஒன்று மற்றொன்றை சார்ந்துள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான் பூமியில் சமநிலை ஏற்படும். நாம் உணவு, மருத்துவம் உள்ளிட்ட தேவைக்கு பல்லுயிர்களை சார்ந்து இருக்கிறோம். பல்லுயிர்களுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆண்டுதோறும் ஐ.நா. சார்பில் மே 22ல் சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நீர், நிலத்தில் வாழும் உயிரின வகைகளின் தொகுப்பு பல்லுயிர் பரவல் எனப்படுகிறது. 10 விலங்குகள், தாவர இனங்கள் அழியும் நிலையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை