உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

பாராசிட்டமாலின் பாதிப்புகள்

மழை, குளிர் காலங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சலினால் உடலின் வெப்ப நிலை சராசரிக்கும் மிக அதிகமாகும் போது, 'இழுப்பு' போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.காய்ச்சல் வெப்ப நிலையை உடனடியாகக் குறைக்க, பாராசிட்டமால் உதவுகிறது. ஆனால் 18 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, அடிக்கடி பாராசிட்டமால் கொடுத்தால் ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது என, லண்டனில் நடந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 6 வயது குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராயும் போது, அவர்களுக்கு ஒன்றரை வயதுக்குள் அதிகளவில் பாராசிட்டமால் கொடுத்திருந்தது தெரிய வந்துள்ளது. குழந்தைகள் நல மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, பாராசிட்டமாலைப் பயன் படுத்த வேண்டும். அவர்கள் நிர்ணயித்த அளவு மட்டுமே தர வேண்டும். பெற்றோர்கள் தன்னிச்சையாக பாராசிட்டமாலை குழந்தை களுக்கு தரக்கூடாது.

தகவல் சுரங்கம்

வெளியேறும் சட்டசபைகள்

தமிழகத்தில் சட்டசபை இடமாற்றம் செய்யப் பட்டது போல, கர்நாடகா, மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் ஒரு முறை சட்டசபை இட மாற்றம் செய்யப்படுகிறது.கர்நாடக மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத் தொடர், பெங்களூருவுக்கு அடுத்து பெல்காம் நகரில், ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா எல்லைப்புறத்தில் உள்ள பெல்காமை, மகாராஷ்டிரா சொந்தம் கொண்டாடி வருவதால், உரிமையை நிலை நாட்டுவது போல் கர்நாடக மாநில சட்டசபை பெல்காமிலும் நடைபெறுகிறது.விதர்பா தனி மாநில கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. விதர்பாவை மகாராஷ்டிரா அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாக விதர்பா மாநில இயக்கத்தினர் கூறுகின்றனர். எனவே விதர்பா பகுதிக்கு முக்கியத்துவம் தரும் வகையில், மகாராஷ்டிரா சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் மும்பைக்கு வெளியே நாக்பூரில் இரண்டு வாரங்கள் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !