உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்நிறம் மாறும் பாறைவடக்கு ஆஸ்திரேலியாவில் 'ஆலிஸ் ஸ்பிரிங்ஸ்' அருகே 'உலுரு' பாறை உள்ளது. ஒரே பாறையால் ஆன இந்தக் குன்று உலகில் பெரியது. அவ்வப்போது நிறம் மாறிக் காட்சி தருவது இதன் சிறப்பு. இதன் இயற்கை நிறம் கருங்கல் பாறைக்கே உள்ள நீலம் கலந்த சாம்பல். ஆனால் வெயில் படும்போது அது சிவப்பு நிறமாகவும், பகலில் பழுப்பு நிறமாகவும், மாலையில் நீலம் கலந்த சிவப்புப் பாறையாகவும் தோற்றமளிக்கும். பாறையில் உள்ள தனிமங்கள் சூரிய வெப்பத்தை உள்வாங்கும் போது ஏற்படும் மாற்றத்தாலேயே இப்படி வெவ்வேறு நிறங்களில் தோற்றமளிக்கின்றன.தகவல் சுரங்கம்இளம் பெண் எம்.பி.,லோக்சபாவுக்கு இதுவரை 17 முறை தேர்தல் நடந்துள்ளது. இதில் இளம் பெண் எம்.பி.,யாக தேர்வானவர் சந்திர முர்மு (25 வயது, 11 மாதம், 8 நாள்). எஸ்.டி., பிரிவை சேர்ந்த இவர் ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் சார்பில் 2019ல் கெயோன்கர் தொகுதியில் பா.ஜ.,வின் ஆனந்த நாயக்கை 66,192 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார். * லோக்சபா வரலாற்றில் அதிக வயதில் (89) எம்.பி.,யானவர் உபி.,யின் ஷபிகுர் ரஹ்மான் பார்க். இவர் 2019ல் சாம்பால் தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் 1.74 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை