உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்புத்தம் புதிய பூமிபூமியை போன்ற புதிய கிரகத்தை சர்வதேச விஞ்ஞானிகள் குழு, நாசாவின் 'டெஸ்' விண்கலம் மூலம் கண்டுபிடித்துள்ளனர். இதன் பெயர் 'கிளைஸ் 12பி'. இது பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் துாரத்தில் அமைந்துள்ளது. ஒரு ஒளி ஆண்டு என்பது ஓராண்டில் ஒளி பயணிக்கும் தொலைவு. இது பூமியை விட சிறிய அளவு உடையது. இதன் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ். இதற்கு பூமியை போல வளிமண்டலம் இருக்கிறதா எனவும், அதன் இரவு நேர வெப்பநிலை தரைப்பகுதியில் தண்ணீர் உருவாக ஏதுவாக உள்ளதா என்பதையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.தகவல் சுரங்கம்பெண்களுக்கு அதிகாரம்அதிபர், பிரதமர், அமைச்சர் உள்ளிட்ட அரசின் உயர் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தி, ஐ.நா., சார்பில் ஜூன் 24ல் 'சர்வதேச பெண் அதிகாரிகள் தினம்' கடைபிடிக்கப்படுகிறது. உலக நாடுகளில் பெண்கள் அதிகாரத்தில் இருக்கும் போது, எளிய மக்கள், சுற்றுச்சூழல், சமூக ஒற்றுமைக்கு ஏற்ற சட்டங்களை நிறைவேற்றுகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் 193 நாடுகள் ஐ.நா., சபையின் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஆனால் இதில் 31 நாடுகளில் மட்டுமே பெண் தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை