உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்விமானத்தை போல விண்கல்விமானத்தின் அளவை போல உள்ள 'எம்.எம்1' விண்கல், நாளை (ஜூன் 28ல்) பூமிக்கு அருகே கடந்து செல்ல உள்ளது. அப்போது பூமியில் இருந்து 29 லட்சம் கி.மீ., துாரத்தில் இருக்கும். இது பூமி - நிலவு இடையிலான துாரத்தை போல ஏழு மடங்கு. இதன் நீளம் 120 அடி. இதன் வேகம் மணிக்கு 39,295 கி.மீ. விண்வெளியில் சுற்றி வரும் விண்கற்களில் 460 அடி நீளத்துக்கு மேல் உள்ளவற்றை, தீங்கு விளைவிக்கும் விண்கற்கள் என நாசா பட்டியலிட்டுள்ளது. இதன்படி இந்த 'எம்.எம்1' விண்கலம் இதற்குள் இல்லாததால், இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் சுரங்கம்சிறு, குறு, நடுத்தர தொழில் தினம்உலகின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை அங்கீகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 27ல் உலக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 2030க்குள் 60 கோடி வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது. * அமெரிக்காவின் ஹெலன் கெல்லர், பிறவியிலேயே காது கேளாமை, பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டவர். இருப்பினும் தன்னம்பிக்கை, விடாமுயற்சியில் பல சாதனைகளை படைத்தவர். இவரது பிறந்தநாளான ஜூன் 27 ஹெலன் கெல்லர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ