அறிவியல் ஆயிரம் : தென்னையின் தனித்தன்மை
அறிவியல் ஆயிரம்தென்னையின் தனித்தன்மைபுயல் வீசும் நேரத்தில் தென்னை மரங்கள் எளிதில் விழுவதில்லை. அதற்கு காரணம் அவற்றின் திசுக்களின் அமைப்பு தான். தென்னை மரத்தில் வெளிப்பகுதி கனமாகவும், உட்பகுதி பஞ்சு மாதிரியும் இருக்கும். அது, ஓரளவு வளைந்து கொடுக்கும் தன்மையைப் பெற்றிருக்கும். இதனால் காற்று வீசும் போது இணக்கமாக ஈடு கொடுத்து, மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விடும். எனவே எளிதாக விழுவதில்லை. பனை போன்ற தாவரங்கள் புல்லினத்தை சேர்ந்தவை. அதன் திசுக்கள் மாறுபட்டுள்ளன. இதனால் புயல் நேரத்தில் இவை விழுவதற்கு வாய்ப்பு அதிகம்.