உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்இயற்பியல் நிறம் எதுபிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நிறமும் சூரிய ஒளியில் உள்ளன. இயற்பியலில் நிறம் என்பது மின்காந்த அலையின் நீளம் அல்லது அதிர்வெண். எனவே ஒவ்வொரு அலைநீளமும் ஒவ்வொரு நிறம்தான். சூரிய ஒளியில் இருக்கும் மின்காந்த அலைகளில் அனைத்து அலைநீளங்களும் உள்ளன. ஆகவே தாவரம் வளர சூரியனின் நிறங்கள் தேவையில்லை, ஒளி போதும். ஒளிச்சேர்க்கை வழியாக தாவரங்கள் வளர்கின்றன. ஒளிச்சேர்க்கை வினையில் தகுந்த அலைநீளமுள்ள சூரியக்கதிரை உறிஞ்சி வெளியிடும் பணியை தாவரங்களில் உள்ள பச்சையம் செய்கிறது.தகவல் சுரங்கம்உயரமான கட்டடம்உலகின் உயரமான கட்டடம் துபாயில் உள்ள புர்ஜ் கலிபா டவர். இதன் உயரம் 2722 அடி. 2010ல் திறக்கப்பட்டது. இந்நிலையில் சவுதியின் ஜெட்டா நகரில் அமைக்கப்படும் பொருளாதார நகரின் ஒரு பகுதியாக ஜெட்டா டவர் கட்டப்பட்டுகிறது. இதில் 165 மாடிகள் உள்ளன. பரப்பளவு 26.24 லட்சம் சதுர அடி. 59 லிப்ட் அமைகிறது. புர்ஜ் கலிபா டவரை வடிவமைத்த அமெரிக்க இன்ஜினியர் அட்ரியன் ஸ்மித் தான், இதையும் வடிவமைத்துள்ளார். உயரம் 3281 அடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டடம் திறக்கப்படும்போது, உலகின் உயரமான கட்டடம் என்ற பெயர் பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை