| ADDED : ஜன 30, 2024 07:30 PM
அறிவியல் ஆயிரம்முதலை கண்ணீர் காரணம்போலியாக கண்ணீர் சிந்துபவரை 'முதலை கண்ணீர் வடிக்காதே' என்பர். இதற்கு காரணம் முதலை வடிப்பது உண்மையான கண்ணீர் இல்லை. இது தன் உடலில் அதிகமாக உள்ள உப்பை, கண்கள் வழியாக தண்ணீருடன் கலந்து வெளியே விடுகிறது. பார்ப்பதற்கு கண்ணீர் போல தெரியும். முதலை ஏரி, ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் வாழும். ஆயுட்காலம் 35 - 75 ஆண்டுகள். நீளம் 10 - 16 அடி. அதிகபட்ச எடை 1200 கிலோ. மணிக்கு 35 கி.மீ., வேகத்தில் செல்லும் .இதில் 14 வகைகள் உள்ளன. இதற்கு அதன் வாழ்நாளில் 4 ஆயிரம் பற்கள் முளைக்கும்.தகவல் சுரங்கம்சர்வதேச வரிக்குதிரை தினம்குதிரை இனத்தை சேர்ந்தவை வரிக்குதிரை. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஜன. 31ல் சர்வதேச வரிக்குதிரை தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாலுாட்டி வகையை சேர்ந்தது. இவை கூட்டமாக வாழும். மூன்று வகைகள் உள்ளன. நின்றுகொண்டே துாங்கும். இரண்டு வரிக்குதிரைகள் ஒன்றின் மீது ஒன்று தங்களின் கழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு நின்று ஓய்வு எடுக்கும். இதன் உயரம் 3 -- 7 அடி. நீளம் 7 -- 10 அடி. மணிக்கு 68 கி.மீ., வேகத்தில் ஓடும். எடை 250 -- 500 கிலோ. ஆயுட்காலம் 20 -- 30 ஆண்டுகள். ஒரு வரிக்குதிரையின் வரி, மற்ற வரிக்குதிரையிடம் இருந்து வேறுபட்டது.