உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / தினமலரில் செய்தி வந்தால் அரசு கவனிக்கும்

தினமலரில் செய்தி வந்தால் அரசு கவனிக்கும்

ஏழை எளிய மக்களின் பிரச்னைகளின் மீது அதீத கவனம் செலுத்தி, ஆளும் வர்க்கத்துக்கும், அதிகாரிகளுக்கும் கொண்டு செல்லும் உன்னத பணியை, 'தினமலர்' செய்து வருகிறது. ஆட்டோ, கால் டாக்ஸி என, அமைப்பு சாரா ஓட்டுனர் தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும், வாழ்வாதாரப் போராட்டங்களையும், தெளிவாகவும், மிகவும் விரிவாகவும், அரசுக்கு எடுத்துச் சென்று, சிறப்பான சமூக சேவையை, தினமலர் செவ்வனே செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல், தினமலர் நாளிதழில், நமது செய்தி வந்து விட்டால், நிச்சயம் அரசின் கவனத்திற்கு சென்று விட்டது என்ற நம்பிக்கையை, தொழிலாளர்களுக்கு கொடுத்திருக்கிறது. சில உதாரணங்களை சொல்கிறேன். 'மேக்ஸி கேப்' வாகனங்களுக்கு, காலாண்டு வரிகளை தமிழக அரசு ஆயுட்கால வரியாக மாற்றி அமைத்த போது, அதை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுதும் ஓட்டுனர் தொழிலாளர்கள் நடத்திய போராட்ட செய்திகளை தினமலர் தொடர்ந்து வெளியிட்டதால், விதிக்கபட்ட ஆயுட்கால வரியை, நான்கு ஆண்டுகளில் நான்கு தவணைகளாக செலுத்த, அரசு அவகாசம் வழங்கியது. அதே போல், கடந்த 2023ல், போக்குவரத்து மானிய கோரிக்கையின் போது, ஓட்டுனர் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன் வைத்து, 'உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கம்' அறிவித்த கோட்டை முற்றுகை போராட்ட செய்தியை, தினமலர் சிறப்பாக வெளியிட்டது. அதை தொடர்ந்து, அன்றைய போக்குவரத்து துறை ஆணையர் நிர்மல் ராஜ், தொழிற்சங்க நிர்வாகிகளை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, பேச்சு நடத்தினார். அந்த பேச்சை தொடந்து, சில நாட்களில் நடந்த மானிய கோரிக்கை விவாதத்தில், மற்ற மாநிலங்களில் உள்ளது போல், தமிழகத்திலும், இலகுரக பயணியர் பொது போக்குவரத்து வாகனங்களை இயக்க 'பேட்ஜ்' அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டது. அந்த பேச்சு வார்த்தையே, இன்று வரை அமைச்சர் உடனான தொடர்பை வலுப்படுத்தி உள்ளது. ஒரு செய்தியை ஒரு முறை கடமைக்கு வெளியிடாமல், அதன் தொடர்ச்சியை செய்திகளாக வெளியிட்டு, ஏழை தொழிலாளர் வர்க்கத்திற்கு நம்பிக்கை கொடுத்து வருகிறது தினமலர். அதனாலேயே, தினமலர் செய்தி என்றால் 100 சதவீதம் உண்மைதான் என்ற நம்பகத்தன்மை உள்ளது. தமிழ் நாளிதழ்களில், நடு நிலையோடு, அனைத்து தரப்பு மக்களின் பிரச்னைகளையும் எடுத்துரைக்கும் தினமலருக்கு வயது 75. இந்த தமிழ் சமூகம் உள்ளவரை, அனைத்து தரப்பு மக்களுக்காகவும், இன்று போல் எப்போதும், தனது பணியை தொடர, நன்றியுடன், வாழ்த்துகிறோம். ஜாஹிர் உசேன் தலைவர், தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுனர் சங்கங்கள் கூட்டமைப்பு ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை