மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ரோடு சீரமைப்பு
09-Dec-2025
பள்ளி வளாகத்தில் மழைநீர் அகற்றம்
05-Dec-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் கணினி பிரிவு பயிலும், 90 மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாட பயிற்சி அளித்து வந்த 6 கணினிகளில், 4 கணினிகள் பழுதடைந்தன. மீதமுள்ள இரு கணினிகளில் பள்ளி அலுவலக அறையில் ஒன்றும், மாணவர்களுக்கு பாடம் நடத்த ஒன்றும் பயன்படுகிறது.இதனால், கணினி அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, ஒரே ஒரு கணினி வாயிலாக, 90 மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது.எனவே, இப்பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கணினிகள் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதுகுறித்தான செய்தி நமது நாளிதழில் கடந்த 11ம் தேதி வெளியானது. இதை தொடர்ந்து இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து, புதிதாக ஒரு கணினி வாங்கினர். நேற்று, பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம், மாநகராட்சி கவுன்சிலர் மல்லிகா ஆகியோரிடம் கணினியை வழங்கினர். மேலும், பழுதடைந்த கணிகளையும் பழுதுநீக்கி தருவதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.இருப்பினும், இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கணினி வழங்க மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.மதுரமங்கலத்தில்...
மதுரமங்கலத்தில், முன்னாள் மாணவர்கள் சார்பில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கணினியை, அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய உறுப்பினர் எல்லம்மாள் தலைமை வகித்தார். 1993 - 94ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில், 50 ஆயிரம் ரூபாய் செலவில், கணினி, மதுரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, அதன் தலைமை ஆசிரியர் ஆனந்த்குமாரிடம் வழங்கப்பட்டது.இதில், முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
09-Dec-2025
05-Dec-2025