உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / காலிபிளவர் விளைநிலங்களில் ஆய்வு; தோட்டக்கலைத்துறை நடவடிக்கை: தினமலர் செய்தி எதிரொலி

காலிபிளவர் விளைநிலங்களில் ஆய்வு; தோட்டக்கலைத்துறை நடவடிக்கை: தினமலர் செய்தி எதிரொலி

உடுமலை; குடிமங்கலம் அருகே, காலிபிளவர் சாகுபடியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து, தோட்டக்கலைத்துறையினர் நேற்று நேரடியாக ஆய்வு செய்தனர்.குடிமங்கலம் அருகே கொள்ளுப்பாளையத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு விவசாயிகள் பரவலாக காலிபிளவர் சாகுபடி செய்துள்ளனர்.அப்பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகம் உள்ளிட்ட விளைநிலங்களில், அறுவடை செய்த காலிபிளவரில் நோய்த்தாக்குதல் தென்பட்டதால், சந்தைகளில், விற்பனையாகவில்லை.அறுவடை சமயத்தில், ஏற்பட்ட பிரச்னையால், விவசாயிகள் பாதிக்கப்பட்டதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.இதையடுத்து கொள்ளுப்பாளையம் கிராமத்தில், வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேரடி ஆய்வு செய்தனர்.அக்குழுவினர் கூறியதாவது: கொள்ளுப்பாளையத்தில் நேரடி ஆய்வு செய்ததில், காலிபிளவர் செடிகளில், பூச்சி, நோய்த்தாக்குதல் எதுவும் கண்டறியப்படவில்லை.ஆனால், அருகிலுள்ள தென்னை நார் தொழிற்சாலையில் இருந்து, நார் துகள்கள் செடி மற்றும் பூவில் விழுவதால், காலிபிளவர் நிறம் மாறி, சந்தைப்படுத்துவதில், பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.இதையடுத்து, அருகிலுள்ளதென்னை நார் தொழிற்சாலையை சுற்றிலும், சவுக்கு மரங்களை உயிர் வேலியாக பராமரித்து, நிழல் வலை கட்டவும், மட்டை அரவை செய்யும் போது, தண்ணீர் தெளித்து பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு, அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி