மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
கொட்டாம்பட்டி: காடுகாவல் நகர் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக பத்து ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை தொட்டி கட்டியதோடு சரி. அதன்பின் பயன்பாட்டிற்கு வராமல் புதர்மண்டி காட்சிப் பொருளாக கிடந்தது. இதனால் இப் பகுதி மக்கள் குடிநீருக்காக 4 கி.மீ., தொலைவில் பால்குடிக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்தனர்.இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட உதவி செயற்பொறியாளர் நாகராஜன் நடவடிக்கை மேற்கொண்டார். தொடர்ந்து நான்கு நாட்களாக ஊழியர்கள் ஒத்துழைப்போடு மேல்நிலை தொட்டியில் காவிரி குடிநீரை நிரப்பி சப்ளை செய்ததால் மக்கள் மகிழ்ந்தனர். பத்தாண்டு கனவு நனவானதாக மக்கள் தினமலர் நாளிதழுக்கு நன்றி கூறினர்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025