உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  பள்ளி வளாகத்தில் மழைநீர் அகற்றம்

 பள்ளி வளாகத்தில் மழைநீர் அகற்றம்

புதுச்சத்திரம்: தினமலர் செய்தி எதிரொலியாக, பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டது. புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 47 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 'டிட்வா' புயல் காரணமாக, பெய்த தொடர் மழையால், பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து ஊராட்சி சார்பில், நேற்று பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீரை இன்ஜின் மூலம் வெளியேற்றும் பணி நடந்தது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ