உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

கேரளாவின், வயநாடு தொகுதி இந்திய கம்யூ., வேட்பாளர் ஆனி ராஜா: வயநாட்டில் போட்டியிடும் ராகுல், கடைசி நேரத்தில் ரேபரேலியிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இரண்டிலும் வெற்றி பெற்றால், ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். இதன் வாயிலாக இரண்டு தொகுதி மக்களுக்கும் அவர் அநீதி இழைக்கிறார். அவர், வயநாடு தொகுதியை கைவிட அதிக வாய்ப்பு உள்ளது. இது குறித்து, அந்த தொகுதி மக்களுக்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும். டவுட் தனபாலு: 'வயநாடு, ரேபரேலின்னு ரெண்டு தொகுதியிலும், ராகுல் தோல்வி அடைவார்' என்றல்லவா நிஜமான எதிர்க்கட்சி வேட்பாளரா நீங்க சொல்லியிருக்கணும்... வயநாடு மக்களை அவர் கைவிட்டுடுவார் என சொல்லியதன் வாயிலாக, அங்க ஜெயிக்கிற நம்பிக்கை உங்களுக்கு போயிடுச்சோ என்ற, 'டவுட்'தான் வருது!தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை: ஒவ்வொரு ஆண்டும் பெருமளவு மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது. குறிப்பாக, 2022ல் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், 600 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வீணானது. அதன் பிறகும், தி.மு.க., அரசு சுதாரிக்கவில்லை. காவிரி நீரில், தமிழகத்தின் உரிமையை, கர்நாடக அரசிடம் அடகு வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.டவுட் தனபாலு: கர்நாடக மாநிலத்துல இருக்கிற உங்க கட்சியினர், 'தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் காவிரி உரிமையை, காங்., ஆட்சியாளர்கள் அடகு வச்சுட்டாங்க'ன்னு குற்றம் சாட்டுறாங்க... காவிரி பிரச்னையில் உங்க கட்சி, மாநிலத்துக்கு ஏற்ப அரசியல் பண்றது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!காங்., - எம்.பி., ராகுல்: என் பாட்டி, தாத்தா வெற்றி பெற்ற தொகுதி ரேபரேலி. இங்கு நான் போட்டியிடுவது மிகவும் உணர்ச்சிகரமான ஒரு தருணம். கர்ம பூமியில் உள்ளவர்களுக்கு சேவை செய்யும் மிகப் பெரிய பொறுப்பை எனக்கு என் தாய் வழங்கியுள்ளார். என்னை பொறுத்தவரை ரேபரேலி, அமேதி ஆகிய இரண்டுமே இரு கண்கள் போன்றவை. அமேதியில் போட்டியிடும் கிஷோரி லால் சர்மா, எங்கள் குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர். டவுட் தனபாலு: உங்க தாய் சோனியா தான், ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு தந்தார்னு கூறி, உங்க கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, 'டம்மி' தான் என்பதை சொல்லாம சொல்லிட்டீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Thangavelu Marudhaiyappan
ஆக 03, 2024 13:33

இரண்டு தொகுதியில போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஒருதொகுதிக்கான செலவு தொகைய வசூல் செய்ய வேன்டும்.


venugopal s
மே 06, 2024 15:55

அண்ணாமலை அவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூறியதற்கு டவுட் தனபாலுக்கு நன்றி! பரவாயில்லையே, நீங்கள் கூட அவ்வப்போது நடுநிலையாக பேசுகிறீர்கள்!


D.Ambujavalli
மே 06, 2024 09:57

இது ஒன்றில் தான் கார்கே டம்மியாகி இருக்கிறாரா? மன்மோகன் முதல் எல்லாருமே டம்மியாக்கப்பட்டவர்கள் தான் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் மனுக்கொடுத்து கோர்ட் எச்சரிக்கைக்குப்பின் இரண்டாக்கிக்கொண்டவர் இன்னும் எத்தனையோ முன்னுதாரணங்கள் உள்ளனவே


ரவி
மே 06, 2024 06:59

இதில் என்ன சந்தேகம் கார்கே டம்மி தலைவரு மட்டுமல்ல சோனியா குடும்பத்தின் தாங்கியும் கூட!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை