உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: கோவையில் அ.தி.மு.க.,வுக்கு ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், பா.ஜ.,வுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. அ.தி.மு.க., கோட்டை எனப்படும் கோவையில் பா.ஜ., டிபாசிட் பெற்றுள்ளது சென்னை, மதுரை என, பல தொகுதிகளில் அ.தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டவுட் தனபாலு: 'உன்னால நான் கெட்டேன்; என்னால நீ கெட்டாய்' என்ற கதையாக உங்க ரெண்டு கட்சிகளும் தனித்தனியா களம் கண்டதன் பலனை இப்ப அனுபவிக்குறீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை... இனியாவது பலமான கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிற முடிவை எடுக்க வில்லை என்றால், தமிழகத்தில் தாமரை மலர்வதும், 'டவுட்'தான்!பத்திரிகை செய்தி: பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., போட்டி யிட்ட 10 தொகுதிகளிலும் மொத்தமாக, 18 லட்சத்து 79,686 ஓட்டுகள், அதாவது 4.32 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளது. 2009, 2014, 2019 லோக்சபா, 2011, 2016, 2021 சட்டசபை என தொடர் தோல்விகளால், தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை, பா.ம.க., இழந்தது. அதை திரும்ப பெற முடியாத நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டு உள்ளது.டவுட் தனபாலு: வி.சி., மற்றும்நாம் தமிழர் மாதிரியான சிறிய கட்சிகள் கூட, மாநில கட்சி அந்தஸ்தை வாங்கிடுச்சு... ஆனா, இழந்த அந்தஸ்தை 15 வருஷமா மீட்க முடியாம பா.ம.க., தள்ளாடுது... தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது தான் இதற்கு காரணம் என்பதில், 'டவுட்'டே இல்லை!தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, என்னை பார்த்து அடிக்கடி, 'கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது' என்று கேட்பார், இரண்டாவது முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக, நான் அவருக்கு பதில் சொல்கிறேன். அந்த தகுதி கூட இல்லாதவர், தமிழக பா.ஜ., தலைவராக நீடிப்பது அக்கட்சிக்கு நிச்சயமாக நல்லது இல்லை.டவுட் தனபாலு: அந்த கட்சி நல்லா இருக்கணும்னு நீங்க ஏன் ஆசைப்படுறீங்க... பா.ஜ., நன்றாக இருப்பது, தி.மு.க.,வுக்கு தான் ஆபத்தாக அமையும் என்பது தெரியாம, 'சேம் சைடு கோல்' போடுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Dharmavaan
ஜூன் 07, 2024 20:58

ஈரோடு போல் தேர்தல் ஆணையம் திமுகவை கண்டுகொள்ளாத கருப்பு அதிகாரி ஊழல் சாஹு மாறினால்தான் நிலைமை மாறும்


Anantharaman Srinivasan
ஜூன் 07, 2024 19:38

பமாக ராம்தாஸ்க்கு ஒரே கல்லுலே இரண்டு மாங்கா விழணும். முதல் மாங்கா பொட்டி Important. இரண்டாவது ஜெயிப்பது. அது Optional. அதனால் தான் அங்கிகாரம் பறிபோகிறது.


Anantharaman Srinivasan
ஜூன் 07, 2024 19:23

கோவையில் அதிமுக ஓட்டுக்களை இவிஎம் மிஷின் மூலமாக பஜாக மற்றி விட்டதாக பேசப்பபடுகிறது.


D.Ambujavalli
ஜூன் 07, 2024 06:27

லாரிகள் டிரக்குகள் கொள்ளாது வந்தும் கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையத்தின் பங்கு ஒவ்வொரு திமுக வெற்றியிலும் உள்ளது என்பது வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல் ஓட்டுப்போட்ட மக்களுக்குத் தெரியும்


புதிய வீடியோ