உள்ளூர் செய்திகள்

" டவுட் தனபாலு

தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்: சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தில் தேவையில்லாத பகுதிகளை நீக்கிவிட்டு சமச்சீர் பாடத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தி உள்ளோம்.

டவுட் தனபாலு: 'அடாவடி பண்ற எம்.எல்.ஏ.,க்களை நீக்கிட்டு, நல்லா செயல்படறவங்களை மட்டும் வச்சுக்கணும்'னு உங்களுக்கும் தான் எல்லாரும் சொல்றாங்க... நீங்க கேட்கறீங்களா...?

தமிழக இளைஞர் காங்., தலைவர் யுவராஜா: உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர் காங்கிரசுக்கு முக்கியத்துவம் அளிக்க, தலைமையை வலியுறுத்துவேன். பாத யாத்திரையில் பங்கேற்ற, 135 பேருக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கித் தருவேன்.

டவுட் தனபாலு: ரொம்ப குறிப்பா சொல்றதைப் பார்த்தா, அந்த வாக்குறுதி கொடுத்து தான் பாதயாத்திரைக்கு கூட்டமே சேர்த்திருப்பீங்க போலத் தெரியுதே...!

தி.மு.க., பொதுக்குழு தீர்மானம்: கலைஞர், 'டிவி' நிறுவனத்தில் கனிமொழி, 20 விழுக்காடு பங்குக்கு உரியவர் என்ற முறையில், அதை ஒரு குற்றமாகக் கற்பித்து, கனிமொழியும், நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் ஜாமினில் வருவதைக் கூட இந்திய புலனாய்வுத்துறை கடுமையாக ஆட்சேபித்து, இத்தனை நாட்கள் சிறையில் வைத்திருப்பது, இயற்கை நியதிக்கும், நியாயங்களுக்கும் புறம்பானது.

டவுட் தனபாலு: சும்மா நீங்களே ஏன்ங்க, '20 சதவீதம் வச்சிருக்கிற கனிமொழி, சரத்குமார்'னு திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டிட்டு இருக்கீங்க...? உணர்ச்சிவசப்பட்டு, 60 சதவீதம் வச்சிருக்கிற தயாளு அம்மாளையும் பட்டியல்ல சேர்த்துடப் போறாங்க...!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை