உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக தகவல், தொழில்நுட்ப துறை அமைச்சர் தியாகராஜன்: இங்கு, வாக்காளர்கள், பிரதிநிதிகள் விகிதாசாரத்தில், 2 லட்சம் வாக்காளர்கள் அடங்கியது ஒரு, எம்.எல்.ஏ., தொகுதி எனவும், 10 லட்சம் வாக்காளர்கள் அடங்கியது ஒரு, எம்.பி., தொகுதி எனவும் உள்ளதை மாற்ற வேண்டும். சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில், 30,000 பேருக்கு ஒரு மக்கள் பிரதிநிதி என உள்ளது. அதுபோல இங்கும் அமைத்தால், மக்களும் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு கேள்வி கேட்பர்.டவுட் தனபாலு: இவர் வேற... மக்கள் தொகையை கட்டுப்படுத்துறதுல சிறப்பா செயல்பட்ட தமிழகத்துக்கு தண்டனையா, இப்ப இருக்கிற, எம்.பி., தொகுதிகளையே குறைக்கலாமான்னு மத்திய அரசு யோசனை பண்ணிட்டு இருக்குது... இதுல, ௩௦,௦௦௦ பேருக்கு ஒரு மக்கள் பிரதிநிதி கதை எல்லாம் இங்கு நடக்குமா என்பது, 'டவுட்'தான்.பத்திரிகை செய்தி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் அறிவிக்கப்பட்டுள்ள, கோவை - பெங்களூரு, 'வந்தே பாரத்' ரயில், அதிகாலை, 5:00 மணிக்கு கோவையில் கிளம்புவதும், ௩௮௦ கி.மீ.,யை கடக்க ஆறரை மணி நேரம் பயணம் என்பதும், கோவை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.டவுட் தனபாலு: 'பிளைட்'டுக்கு செலவழிக்கிற பணத்துல, கால்வாசியில அதிவேக பயணம் செய்யலாம்னு தானே, வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்தாங்க... இப்படி, பாசஞ்சர் வேகத்துல போற ரயிலுக்கு எல்லாம் வந்தே பாரத்னு பெயர் சூட்டுனா, அதுக்கான மரியாதையே போயிடும்கிறதுல, 'டவுட்'டே இல்லை!காங்., மூத்த தலைவர் சச்சின் பைலட்: மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், காங்., கட்சியின், 'நாங்கள் தயார்' என்ற பேரணிக்கு மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் லோக்சபா தேர்தலில், 'இண்டியா' கூட்டணி வெற்றியை, இது உறுதி செய்யும்.டவுட் தனபாலு: நாக்பூர் பேரணிக்கு கிடைச்ச வரவேற்பு, நாடு முழுக்க கிடைக்கும்னு நம்புறீங்களோ... மறுபடியும் மத்தியில ஆட்சி அமைக்க நீங்க தயாரா இருக்கலாம்... ஆனா, உங்களை ஆட்சியில அமர்த்த, நாட்டு மக்கள் தயாரா இருக்காங்களா என்பது, 'டவுட்' தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Anantharaman Srinivasan
ஜன 01, 2024 23:21

நடைமுறையில் ஒடிக்கொண்டுயிருக்கின்ற ரயில்களை மேம்படுத்தி துரிதமாக ஒட வைப்பதை விட்டுவிட்டு, நொண்டி சாக்கு சொல்லி எல்லா வழித்தடத்திலும் அதிகபொருட்செலவில் வந்தே பாரத் ரமில்களை இயக்குவது மக்களை ஏமாற்றும் செயல். ரயில்வேயின் நிர்வாகச்செலவு அதிகமாகும். நாளைடைவில் கட்டண உயர்வு மக்கள் தலையில் விழும்.


Sankaran Srinivasan
ஜன 01, 2024 12:32

சேலம் பெங்களூரு ஒற்றை பாதை. மலை பகுதி ஆனதால் வளைவுகளும் அதிகம் வந்தே பாரத் 130 km வேகத்தில செல்ல இயலாது


M.S.Jayagopal
ஜன 02, 2024 08:44

கோவை பெங்களூரு தடத்தில் தர்மபுரி வழியாக சாதா எக்ஸ்பிரஸ் ரயிலை மக்களுக்கு வசதியான நேரத்தில் விடலாம்.வன்தேபாரத் ரயில் ,ஒற்றைப்பாதை இருக்கும்வரை ,விடதேவையில்லை.


D.Ambujavalli
ஜன 01, 2024 06:31

வந்தே பாரத்துக்கு வரவேற்பு வேண்டுமென்றால் மற்ற ரயில்களின் வேகத்தைக்குறைத்துவிட்டால் போயிற்று 'இருகோடுகள் தடத்துவம் பந்தயத்தில் ஜெயிக்க ஒன்று வேகமாக ஓடவேண்டும், அல்லது உடன் ஓடுவன் காலை உடைக்க வேண்டும்


sankar
ஜன 01, 2024 13:37

இப்படி ஏதாவது உருட்டுவதுதான் இருநூறுகளின் தலையாய கடமை


Davamani Arumuga Gounder
ஜன 01, 2024 20:58

'' சேலம் பெங்களூரு ஒற்றை பாதை. மலை பகுதி ஆனதால் வளைவுகளும் அதிகம் வந்தே பாரத் 130 km வேகத்தில செல்ல இயலாது '' என்ற எதார்த்த நிலையை திரு.... Sankaran Srinivasan - Bangalore,இந்தியா ... அவர்கள் எடுத்துரைக்கிறார்... ஆனால்.. எதார்த்த நிலைக்கு எதிராக மத்திய அரசின் செய்ல்பாடுகளை குறை சொல்லவேண்டும் என்ற நோக்கில் திருமதி. D.Ambujavalli - Bengaluru,இந்தியா ... கூறுகிறார் எனில் அவர் நிச்சயம் பெங்களூருவில் வசிக்கும் இறுநூறு ரூபா உ.பி. தானோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை