உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்: பள்ளி, கல்லுாரி வளாகங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில், மாநிலம் முழுதும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 6,500 கடைகள் மூடப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.டவுட் தனபாலு: நல்ல விஷயம் தான்... ஆனாலும், 'சீல்' வைக்கப்பட்ட, 6,500 கடைகளில் எத்தனை கடைகள், அபராதம் கட்டியோ அல்லது கட்டாமலோ மீண்டும் திறக்கப்பட்டுள்ளன...? அவற்றில் மீண்டும் புகையிலை பொருட்கள் விற்பனை நடக்கலை என்பதை எல்லாம் அமைச்சர் உறுதிப்படுத்தினாரா என்ற, 'டவுட்' வருதே!அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: எங்களுக்கு எஜமானர்கள் தமிழக மக்கள். அவர்கள் தான் எங்களுக்கு ஓட்டளிக்கின்றனர். அவர்கள் குரல் பார்லிமென்டில் ஒலிக்க, கட்சி நடத்துகிறோம். பதவிக்காக, நாங்கள் அடிமையாக இருந்ததில்லை. மக்களுக்கு சேவை செய்வது தான் எங்கள் நோக்கம்.டவுட் தனபாலு: எல்லா கட்சிகளுமே, 'மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் கொள்கை' என்று தான் முழங்குகின்றன... ஆனா, நிஜத்தில் எந்த அரசியல் கட்சியாலும், மக்களுக்கு எந்த சேவையும் கிடைக்கலை என்பது தான், 'டவுட்'டே இல்லாத உண்மை!பா.ஜ.,வைச் சேர்ந்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்: டில்லிக்கு சென்று விவசாயிகள் போராட்டம் நடத்துவதில், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் போராடும் விதத்தில் தான் பிரச்னை உள்ளது. டிராக்டர், லாரிகளில் சென்று போராடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.டவுட் தனபாலு: ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள்ல இருக்கிற விவசாயிகள் எல்லாம், நடந்தே டில்லிக்கு போய் போராட்டம் நடத்தணும்னு சொல்ல வர்றீங்களா...? அப்படி அவங்க பாதயாத்திரையா டில்லி போய் சேர்றதுக்குள்ள, லோக்சபா தேர்தலே முடிஞ்சிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Arul Narayanan
பிப் 17, 2024 12:16

First of all விவசாயிகள் ஏன் டில்லிக்கே போய் போராட வேண்டும்?


D.Ambujavalli
பிப் 17, 2024 06:47

Avvalavu Thooram. Makkalai. Nambubavar sillaraikkatchikalin. Koottanikku kooda. Vaayilaith. THIRANTHU. Vaiththuk.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை