உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கிலோ ரூ.2.5 லட்சம் மாம்பழம் கர்நாடகாவிலும் விளைச்சல்

கிலோ ரூ.2.5 லட்சம் மாம்பழம் கர்நாடகாவிலும் விளைச்சல்

கொப்பால், உலகின் மிகவும் விலை உயர்ந்த மாம்பழம் என்ற பெருமை பெற்றுள்ள, ஜப்பானின் 'மியாஜாகி' மாம்பழம், தற்போது கர்நாடகாவிலும் விளைந்துள்ளது.கிழக்காசிய நாடான ஜப்பானின் மியாஜாகி நகரில் விளையும் பிரபலமான மாம்பழத்திற்கு, அந்த நகரின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. மியாஜாகி மாம்பழங்கள் 1980 முதல் பயிர் செய்யப்படுகின்றன. இந்த மாம்பழங்கள் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அதிகம் அறுவடை செய்யப்படும். பொதுவாக மாம்பழங்கள் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் இந்த மாம்பழமோ ஊதா நிறத்தில் இருக்கும். பழுத்த பின், தோல் சிவப்பு நிறத்துக்கு மாறும்.மற்ற மாம்பழங்களை விட, அதிக இனிப்புத்தன்மை கொண்டது. நார்ச்சத்து, வைட்டமின் 'சி' வைட்டமின் 'ஏ' சத்துகள் உள்ளன. இதை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சருமத்தை பளபளப்பாக்கும் என கூறப்படுகிறது.அதிகமான மருத்துவ குணங்கள் கொண்ட இந்த மாம்பழம், உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பழம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கிலோ 2.50 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகிறது.நம் நாட்டில் இதுவரை மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மியாஜாகி மாம்பழம் விளைவிக்கப்பட்டது. தற்போது கர்நாடகாவிலும் இந்த பழம் விளைவிக்கப்பட்டுள்ளது.விஜயபுராவைச் சேர்ந்த அஷ்வாக் பாட்டீல் என்ற இளைஞர், தன் வீட்டுத் தோட்டத்தில் இந்த மாம்பழத்தை விளைவித்துள்ளார். இவர், ஏஜென்சி மூலமாக, ஜப்பானில் இருந்து செடிகளை வரவழைத்து தோட்டத்தில் நட்டார். ஒரு மரத்தில் மட்டும் 14 பழங்கள் விளைந்துள்ளன. நல்ல லாபம் கிடைக்கும் என, அஷ்வாக் எதிர்பார்க்கிறார். கொப்பால் நகரில் விவசாயத்துறை சார்பில் மாம்பழ மேளா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை