உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / முயன்றால் முடியாதது ஏதுவுமில்லை: கை, கால்கள் இல்லாதவர் எவரெஸ்ட் ஏறி சாதனை

முயன்றால் முடியாதது ஏதுவுமில்லை: கை, கால்கள் இல்லாதவர் எவரெஸ்ட் ஏறி சாதனை

பனாஜி : கோவாவின் பனாஜியைச் சேர்ந்த, இரண்டு கால்கள் மற்றும் ஒரு கையை இழந்த 30 வயது இளைஞர், எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் அடிவாரத்தை எட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.ஹரியானாவில் பிறந்தவர் தின்கேஷ் கவுஷிக். தன் 9 வயதில் விபத்தில் சிக்கி, இரண்டு கால்கள் மற்றும் ஒரு கையை இழந்தார்.

கடின பயிற்சி

பெற்றோருடன் கோவாவுக்கு இடம்பெயர்ந்த அவர், உடல் தகுதியை மேம்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபட்டார். தற்போது அவர் உடற்தகுதி பயிற்சியாளராக உள்ளார்.செயற்கை கால்கள் மற்றும் கைகள் பொருத்தியுள்ள அவர், எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஏற வேண்டும் என்ற ஆவலில் இருந்தார்; இதற்காக கடினமான பயிற்சிகளை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, கடல் மட்டத்தில் இருந்து, 17,598 அடி உயரத்தில் உள்ள எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் அடிவாரத்தை அவர் எட்டினார். கடந்த 11ம் தேதி இந்தச் சாதனையை அவர் படைத்து உள்ளார்.அவருக்கு, கோவாவின் மாற்றுத்திறனாளிகள் உரிமை சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 90 சதவீதம் ஊனமடைந்துள்ள அவர், விடாமுயற்சியுடன் இந்த மலையேற்ற சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வரும் காம்யா கார்த்திகேயன், 16, என்ற சிறுமி, எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஏறி, புதிய சாதனையை படைத்துள்ளார். நம் அண்டை நாடான நேபாளத்தில் உள்ள இமயமலையில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த, உலகின் இரண்டாவது மிகவும் வயது குறைவானவர் மற்றும் இந்தியாவின் மிகவும் குறைந்த வயது மலையேற்ற வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

மாசிப் மலைச்சிகரம்

கடற்படையில் பணியாற்றும் தன் தந்தை கார்த்திகேயன் மற்றும் குழுவினருடன் இணைந்து, கடல் மட்டத்தில் இருந்து, 29,028 அடி உயர மலைச்சிகரத்தை அவர் எட்டிப் பிடித்தார்.இதன் வாயிலாக, ஏழு கண்டங்களில் உள்ள, ஆறு உயர்ந்த மலைச்சிகரங்களை எட்டிய பெருமையையும் அவர் பெற்றார். வரும் டிசம்பரில், அண்டார்டிகாவில் உள்ள வின்சன் மாசிப் மலைச்சிகரத்தில் ஏற திட்டமிட்டுள்ளார்.மும்பையில் பிளஸ் 2 படித்து வருகிறார், இந்த இளம் சாதனையாளர். தன் 7வது வயதில் மலையேற்ற சாகசத்தில் ஈடுபடத் துவங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை